போலி வாகன உதிரி பாகங்கள் விற்பனையா?: போலீஸார் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் மோட்டார் வாகன உதிரிபாக விற்பனையகங்களில் போலி உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என 

விழுப்புரம் மாவட்டத்தில் மோட்டார் வாகன உதிரிபாக விற்பனையகங்களில் போலி உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அறிவுசார் சொத்துரிமை அமல் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
 விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மோட்டார் வாகன உதிரிபாக விற்பனையகங்களில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியான உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனத்தின் சார்பில் அறிவுசார் சொத்துரிமை அமல் பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
 இதையடுத்து, சென்னையிலிருந்து அறிவுசார் சொத்துரிமை அமல் பிரிவு காவல் ஆய்வாளர் கார்த்திகா தலைமையிலான போலீஸார், விழுப்புரம் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்து ஆய்வு செய்தனர்.
 விழுப்புரத்தில் 3 மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளிலும், உளுந்தூர்பேட்டையில் ஒரு கடையிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரத்தில் மேலும் 2 கடைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளதாகவும், அதன் பிறகே போலியான உதிரிபாகங்கள் வைத்திருந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com