காவலர் பணிக்கு தேர்வானவர்களுக்கு 41 இடங்களில் பயிற்சி அளிக்கப்படும்: ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன்

தமிழகம் முழுவதும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 13,183 இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு 41 இடங்களில் விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக காவலர் பயிற்சி ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 13,183 இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு 41 இடங்களில் விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக காவலர் பயிற்சி ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் தெரிவித்தார்.
 சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் காலியாக உள்ள இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த மே மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
 இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் திறன் தேர்வு முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்டது. தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.
 இந்த நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பயிற்சி மையங்களை காவலர் பயிற்சி ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் வியாழக்கிழமை பார்வையிட்டார். மயிலத்தில் உள்ள காவலர் பயிற்சி மையம், விழுப்புரம் காகுப்பம் ஆயுதப் படை தாற்காலிக பயிற்சி மையம், உளுந்தூர்பேட்டை ஆயுதப் படை மையம் ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
 பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 தமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலைக் காவலர்கள் 13,183 பேருக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி விழுப்புரம் உள்பட 41 இடங்களில் நடைபெற உள்ளது. 7 மாதங்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியின்போது, உடல் திறன், உளவியல், சட்டம் குறித்து பயிற்சியளிக்கப்படும். மேலும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள், பாதுகாப்புப் பணி குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதைத் தொடர்ந்து, காவல் நிலையங்களில் ஒரு மாதம் களப் பயிற்சி அளிக்கப்படும். அதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயிற்சி தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார். விழுப்புரம் மாவட்டத்தில் 1,100 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், விழுப்புரத்தில் 30 பேரும், மயிலத்தில் 500 பேரும், உளுந்தூர்பேட்டையில் 300 பேரும் பயிற்சி பெற உள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com