விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.கலியமூர்த்தி தலைமை வகித்தார்.
 கே.ராமசாமி முன்னிலை வகித்தார். மாநில துணைச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளர் ஏ.கோவிந்தராஜ், ஏஐடியுசி மாவட்டச் செயலர் ஆ.சௌரிராஜன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஆ.இன்பஒலி, விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
 விழுப்புரம் மாவட்டத்தில், கடந்தாண்டிஸ்ஸ்ல் விவசாயிகள் கட்டிய பயிர் காப்பீட்டுக்கான தொகையை உடனே வழங்க வேண்டும். வரலாறு காணாத வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாய பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
 நீண்ட காலமாக அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டுத் திட்ட செயலாக்கத்தை தனியார் நிறுவனங்களிடம் வழங்கி இருப்பதை மாற்றி பொதுத்துறை நிறுவனங்களே செய்ய வேண்டும்.
 விவசாயத்தை பாதுகாப்பதற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
 ஜி.நிதானம், பாலசுப்பிரமணியன், கோதண்டபாணி, ஏழுமலை, தர்மலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com