விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலராக மீண்டும் பணியை தொடங்கினார் லட்சுமணன் எம்.பி

விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்டச் செயலராக லட்சுமணன் எம்.பி. வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் பணியைத் தொடங்கினார்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்டச் செயலராக லட்சுமணன் எம்.பி. வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் பணியைத் தொடங்கினார்.
 தமிழகத்தில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் அண்மையில் இணைந்தன. அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது கட்சிப் பதவிகளில் இருந்தவர்கள் அப்படியே தொடருவதாக முடிவு செய்து, அதன்படி அக்கட்சியினர் பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.
 விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் அமைச்சர் சி.வி.சண்முகம், ஓ.பன்னீர்செல்வம் அணியில் மாவட்டச் செயலர் இரா.லட்சுமணன் எம்.பி. என இரு பிரிவாகச் செயல்பட்டனர்.
 இந்த நிலையில், தற்போது இரு அணிகளும் இணைந்துள்ளதையடுத்து, அதிமுக மாவட்டச் செயலரான இரா.லட்சுமணன் எம்பி, கட்சியினர் புடை சூழ நகரிலிருந்து வெள்ளிக்கிழமை ஊர்வலமாகச் சென்று, விழுப்புரம்- சென்னை சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்குச் சென்று மீண்டும் மாவட்டச் செயலர் பணியைத் தொடங்கினார்.
 அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி லட்சுமணன் எம்.பி. மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 இந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலர் அற்புதவேல், ஒன்றியச் செயலர்கள் ராஜேந்திரன், ராமதாஸ், நகரச் செயலர் ஜி.பாஸ்கரன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஜானகிராமன், ராமஜெயம், கிருஷ்ணன், பேரவைச் செயலர் முரளி ரகுராமன், நகர அவைத் தலைவர் அன்பழகன், துணைச் செயலர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி ரத்தினம், மாவட்ட மாணவரணி ராம.சரவணன், செங்குட்டுவன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் குப்புசாமி, சிவா, அர்ச்சுனன், எம்ஜிஆர் மன்றம் தனுசு, தகவல் தொழில் நுட்பப் பிரிவுச் செயலர் மணவாளன், இலக்கிய அணி சுகுமார், பாலாஜி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் மல்லிகா, செந்தில்குமார், சுமதி, செந்தில், நாராயணசாமி, ரவிசக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com