பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணித் தேர்வு: 4,400 பேர் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வை 4,400 பேர் எழுதினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வை 4,400 பேர் எழுதினர்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தமிழகத்தில் காலியாக உள்ள பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 5,458 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு 15 மையங்களில் நடைபெற்றது. 59 மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு தேர்வு அறைகள் கீழ் தளத்தில் ஒதுக்கப்பட்டிருந்தன. 2 தேர்வர்கள் கண் பார்வையற்றவர்கள். இவர்களுக்கு சொல்வதை எழுதுபவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேர்வு நடைபெறும் இடங்களுக்கு போக்குவரத்து வசதி, தடையற்ற மின்சாரம், போலீஸ் பாதுகாப்பு, ஒவ்வொரு தேர்வு அறைக்கும் குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. விண்ணப்பித்தவர்களில் 4,400 தேர்வு எழுத வந்திருந்தனர். 1,058 பேர் வரவில்லை.
விழுப்புரம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, தூய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, கோலியனூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் இந்தத் தேர்வை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, விழுப்புரம் வட்டாட்சியர் சுந்தர்ராஜன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com