பாமக சார்பில் சமூக நீதி மாநில மாநாடு: விழுப்புரத்தில் இன்று நடைபெறுகிறது

விழுப்புரத்தில் பாமக சார்பில் சமூக நீதி மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது. இதற்காக, விழுப்புரத்தை அடுத்த ஜானகிபுரம் புறவழிச் சாலைப் பகுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்

விழுப்புரத்தில் பாமக சார்பில் சமூக நீதி மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது. இதற்காக, விழுப்புரத்தை அடுத்த ஜானகிபுரம் புறவழிச் சாலைப் பகுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பின்தங்கிய சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, கடந்த 1987-ஆம் ஆண்டு 7 நாள்கள் தொடர் போராட்டம் நடைபெற்றது. அப்போது, நடந்த துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். அவர்கள் உயிரிழந்த செப்.17-ஆம் தேதியை தியாகிகள் தினமாக பாமக சார்பில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு தியாகிகள் தினத்தன்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விழுப்புரத்தில் சமூக நீதி மாநில மாநாடு நடத்தப்படுகிறது.
விழுப்பும் அருகே ஜானகிபுரம் புறவழிச் சாலைப் பகுதியில் உள்ள தனியார் மைதானத்தில், மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.
மாநாட்டில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அன்புமணி, தலைவர் கோ.க. மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு மற்றும் பல்வேறு சமுதாயத் தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.
மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்கள் தங்க ஜோதி, சிவக்குமார், ராசாம்பு பூமாலை, தாமரைக்கண்ணன், மாநில துணைத் தலைவர்கள் அன்புமணி, ஹரிகரன், பாண்டியன், கருணாநிதி, ஏழுமலை, மாவட்டச் செயலாளர் புகழேந்தி, பாலசக்தி, முருகன், சேது, முன்னாள் மாவட்டச் செயலாளர் பழனிவேல், மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் தன்ராஜ், வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் புண்ணியகோடி உள்ளிட்டோர் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மாநாட்டையொட்டி நகரின் முக்கிய சாலைகளில் அலங்கார வளைவுகள், தோரணங்கள், சுவரொட்டிகள், பாதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், விழா நடைபெறும் இடம் முழுவதும் மின்னொளியில் மின்னும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்சியினர், வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொள்ள இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் தலைமையில், காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. தேன்மொழி, விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் மேற்பார்வையில் 1,200 போலீஸார்
பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com