வடகிழக்கு பருவமழை: முதன்மை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி

மரக்காணம் அருகே வடகிழக்குப் பருவமழையையொட்டி, வருவாய் மற்றும் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் முதன்மைப் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை

மரக்காணம் அருகே வடகிழக்குப் பருவ
மழையையொட்டி, வருவாய் மற்றும் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் முதன்மைப் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் கடந்த ஓராண்டுக்கு முன்பு பெய்த வடகிழக்குப் பருவமழையின்போது பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே, நிகழாண்டு வடகிழக்கு பருவமழையையொட்டி மரக்காணம் அருகே கூனிமேடு பகுதியில் முதன்மை பொறுப்பாளர்களுக்காக நடைபெற்ற பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.
அப்போது ஆட்சியர் பேசியதாவது: இயற்கை சீற்றத்தால் ஏற்படும் இடர்பாடுகளில் மக்களை காக்க உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது இந்த பயிற்சி முகாமின் மூலமாக ஒத்திகை பார்க்கப்படும். மேலும், பேரிடர் உறுப்பினர் சேர்த்தல், அவர்களுக்கு பயிற்சி அளித்தல் வேண்டும். அப்போதுதான் இயற்கை இடர்பாடுகளை எளிதில் எதிர்கொள்ள முடியும்.
விழுப்புரம் மாவட்டத்தில் 30 கி.மீ. தொலைவுக்கு உள்ள கடற்கரைப் பகுதியில் 19 கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் பேரிடர் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. அனைத்து மையத்திலும் குழுக்கள் அமைத்து முதலுதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேரிடர் காலத்தில் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் நிலையில் உள்ளது. இயற்கை இடர்பாடுகளிலிருந்து பொதுமக்களும் தங்களை தாங்களே எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதனை விளக்குவதே இப்பயிற்சியின் நோக்கமாகும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, திண்டிவனம் சார்- ஆட்சியர் பிரபுசங்கர், மீன்வளத் துறை உதவி இயக்குநர் மணிமேகலை, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, வட்டாட்சியர்கள் பிரபாகரன், சீனுவாசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com