வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணி: வட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை

விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் சுருத்தத் திருத்தப் பணி பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் சுருத்தத் திருத்தப் பணி பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தப் பணிகள் வரும் அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வரும் 1.1.2018 அன்று 18 வயது நிறைவடைந்தவர்களை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சுருக்கத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதில், கடந்த 31.12.1999 அன்று அல்லது அதற்கு முன் பிறந்தவர்களை புதிய வாக்காளர்களாக சேர்த்துக் கொள்ளலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி, பாலினம், புகைப்படம் போன்றவை திருத்தம், பெயர் நீக்கம் செய்யலாம்.
இப்பணிகளை மேற்கொள்வது குறித்து விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள், மேற்பார்வை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியர் சுந்தர்ராஜன் தலைமை வகித்து, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கிப் பேசியதாவது: புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும், குடியிருப்பு மாற்றம் செய்து சென்றவர்கள், இறந்தவர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை முறையாக செய்ய வேண்டும். வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி மற்றும் 21-ஆம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்து விளக்க வேண்டும் என்றார். இதற்காக செப்டம்பர் 8-ஆம் தேதி மற்றும் 22-ஆம் தேதி சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சி முகாமில் தேர்தல் துணை வட்டாட்சியர் ராஜ்குமார், மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணி, வருவாய் ஆய்வாளர்கள் வெங்கடபதி, மஞ்சு, வித்யாலயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com