இயற்கைப் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வுப் பயிற்சி முகாம்

மழைக் காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த இயற்கைப் பேரிடர் விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மழைக் காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த இயற்கைப் பேரிடர் விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோட்ட அளவில் வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத் துறை ஆகியவை சார்பில், ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனம் மூலம் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம் வட்டத்தைச் சேர்ந்த முதன்மைப் பொறுப்பாளர்கள் இயற்கை இடர்பாடுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்து கொள்வது, அதனைத் தடுப்பது குறித்த பேரிடர் விழிப்புணர்வுப் பயிற்சி உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.
பயிற்சி முகாமுக்கு திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தாமரை தலைமை வகித்தார். வருவாய் வட்டாட்சியர்கள் எஸ்.பாலசுப்பிரமணியன் (உளுந்தூர்பேட்டை), நளினி (திருக்கோவிலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். உளுந்தூர்பேட்டை மண்டலத் துணை வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். உளுந்தூர்பேட்டை மண்டலத் துணை வட்டாட்சியர் சங்கரலிங்கம், திருக்கோவிலூர் மண்டலத் துணை வட்டாட்சியர் கற்பகம், கண்டாச்சிபுரம் மண்டலத் துணை வட்டாட்சியர் கண்ணன், உளுந்தூர்பேட்டை வட்டத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com