புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி முதல் வார சனிக்கிழமை விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புரட்டாசி முதல் வார சனிக்கிழமை விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழுப்புரம் அருகே சிறுவந்தாட்டில் உள்ள பிரசித்திபெற்ற கனகவல்லி சமேத லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் வார சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாலை 3 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் புரட்டாசி மாத சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.
தொடர்ந்து, புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை அன்று காலை 5 மணிக்கு சுப்ரபாதத்துடன் சிறப்பு வழிபாடு தொடங்கியது. காலை 7 மணிக்கு மூலவர் லட்சுமிநாராயணப் பெருமாள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
6 மணிக்கு உற்சவர் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப்பெருமாள் கருட வாகனத்தில், மின்னொளி அலங்காரத்தில் வீதியுலா வந்தார். புரட்டாசி மாத வழிபாட்டில், திருமணத் தடைகள் நீங்கும் என நம்பப்படும், மட்டை தேங்காய் வழிபாடு நடைபெற்றது.
விழாவையொட்டி, புதுவை துரைராஜனின் வயலின் இசை நிகழ்ச்சியும், நாகஸ்வர கலைஞர்களின் கச்சேரியும், சிறப்பு பஜனைகளும், அன்னதானமும் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com