அம்பேத்கர் பிறந்த நாளில் அரசு நலத் திட்ட உதவிகள் 

விழுப்புரம் மாவட்டத்தில் அம்பேத்கார் பிறந்த நாளில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

விழுப்புரம் மாவட்டத்தில் அம்பேத்கார் பிறந்த நாளில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
 விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்து நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
 ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தீருதவி தொகையாக 36 பேருக்கு உதவித்தொகையும், இலவச தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது.
 பழங்குடியினர் நலவாரிய அட்டை 36 பேருக்கும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்டத்தில் 220 பேருக்கு வீடுகட்டும் ஆணையும், கிராம தன்னிறைவு திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் 10 பேருக்கும் வழங்கப்பட்டது.
 தோட்டக்கலைத் துறை சார்பில், பழ மரக்கன்றுகள் 10 அங்கன்வாடி மையங்களுக்கும், வீரிய ரக காய்கறி சாகுபடி பராமரிப்பு செலவின மானியமாக 11 பேருக்கு காசோலையும், வேளாண்மைத் துறை சார்பில், கண்டமங்கலம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், காணை வட்டாரத்தைச் சேர்ந்த 15 பேருக்கு சோலார் விளக்குப்பொறி இயந்திரங்களும், காணை, கோலியனூர் வட்டாரத்தைச் சேர்ந்த 7 பேருக்கு மழைத்தூவுவான் இயந்திரங்களும், மின்சாரத் துறை சார்பில் மானிய விலையில் எல்இடி பல்புகள் 9 பேருக்கு வழங்கப்பட்டது.
 மேலும், 20 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகளும், மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தில் 50 பேருக்கு கடன் உதவிகளும் வழங்கப்பட்டது.
 விழாவில், அம்பேத்கார் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மத்திய அரசின் ஏழு திட்டங்களை தேர்வு செய்து, 227 ஊராட்சிகளில் முழுமையாக செயல்படுத்தும் வகையில், பொதுமக்கள் அறியும் வண்ணம் சனிக்கிழமை முதல் மே.5 வரை மாவட்ட அளவிலும், ஊராட்சி அளவிலும் திட்ட விளக்கக் கூட்டங்கள், நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
 மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிரியா, திட்ட இயக்குநர் வெ.மகேந்திரன், ஆதிதிராவிடர் நல அலுவலர் பிரகாஷ்வேல், வேளாண் இணை இயக்குநர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், ஊராட்சி உதவி இயக்குநர் சீனுவாசன் உள்ளிட்ட அதிகாரிகள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com