சீர்வரிசையுடன் வந்து பிள்ளைகளை பள்ளியில் சேர்த்த கிராம மக்கள்! 

திருக்கோவிலூர் அருகே தகடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குத் தேவையான பொருள்களை பொதுமக்கள் சீராகக் கொண்டு வந்து தங்கள் பிள்ளைகளை முதல் வகுப்பில் சேர்த்தனர். 

திருக்கோவிலூர் அருகே தகடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குத் தேவையான பொருள்களை பொதுமக்கள் சீராகக் கொண்டு வந்து தங்கள் பிள்ளைகளை முதல் வகுப்பில் சேர்த்தனர்.
 மாவட்டத்துக்கே முன்மாதிரியாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் ஆண்டுதோறும் பெற்றோர்கள் சீர்கொண்டு வந்து தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர்.
 அதேபோல திங்கள்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சிவ.மதிவாணன் தலைமை வகித்தார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இரா.முரளிகிருஷ்ணன், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கோ.கமலநாதன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) சி.ஜான்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வாசு வரவேற்றார்.
 வரும் கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேர்ப்பதற்காக, பள்ளிக்குத் தேவையான பொருள்களை சீர்கொண்டு, மேள தாளம் முழங்க, ஊர்வலமாக வந்து, பள்ளியில் 55 பிள்ளைகளை முதல் வகுப்பில் சேர்த்தனர். அவர்களை சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற புதுச்சேரி மாநில முன்னாள் கல்வி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் நா.மணிமாறன், புலவர் ம.ஜீவரத்தினம் ஆகியோர் பாராட்டினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com