மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

விழுப்புரத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் பெற்றிட வலியுறுத்தும் போராட்டத்துக்கான ஆயத்தக்

விழுப்புரத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் பெற்றிட வலியுறுத்தும் போராட்டத்துக்கான ஆயத்தக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் தந்தைப் பெரியார் நகர் அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றக் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கு.குணசேகரன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் அ.ரஹீம், மாநிலச் செயலர் ச.சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் இரா.சண்முகசாமி வரவேற்றார். 
மாநில பொதுச் செயலர் ச.மயில் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாநில பொதுச் செயலர் சு.மூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அ.மகாலிங்கம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக முன்னாள் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ஆ.விருசப்பதாஸ், அ.சம்சுதீன், மாவட்டப் பொருளாளர் சு.தண்டபாணி, துணைத் தலைவர்கள் ஷேக்ஜாகீர்உசேன், வில்லியம், அமுதவள்ளி, கலாநிதி, சுதா உள்ளிட்டோர் ஊதிய மீட்பு கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். ஆசிரியர் கூட்டணியின் தொடர் போராட்டத்தால், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் 6-ஆவது ஊதியக்குழுவில், இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், அடுத்த ஊதியக்குழுக்களில் அவ்வூதியம் பறிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் கடைநிலை அரசு ஊழியரின் ஊதியத்துக்கு தள்ளப்பட்டுள்ளதால், பறிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட மாநாடு சென்னையில் வரும் செப்டம்பர் 26-ஆம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டத்திலிருந்து 600 பேர் வரை பங்கேற்பதென கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றினர். சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com