வரதட்சிணை புகார்: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

திண்டிவனத்தில் வரதட்சிணை கேட்டு பெண்ணை மிரட்டிய புகாரில் அவரது கணவர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

திண்டிவனத்தில் வரதட்சிணை கேட்டு பெண்ணை மிரட்டிய புகாரில் அவரது கணவர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்த கருணாகரன் மகன் திவாகரன் (35). இவரது மனைவி காயத்ரி (33). 
இவர்களுக்கு 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 
ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின்போது காயத்ரி குடும்பத்தினர் ரூ.2 லட்சம் பணம், 35 பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசை 
அளித்தனராம். 
திருமணத்துக்குப் பிறகு கனடா நாட்டுக்குச் சென்ற திவாகரன், தனது மனைவி காயத்ரியை உடன் அழைத்துச் செல்லவில்லையாம். 
இது குறித்து கேட்டபோது, திவாகரன் குடும்பத்தினர் காயத்ரியை மிரட்டி, வீட்டைவிட்டு கடந்த ஆண்டு வெளியே அனுப்பியதோடு, வரதட்சிணையாக மேலும் ரூ.2 லட்சம் பணம் கேட்டு துன்புறுத்
தினராம். 
இது குறித்து, காயத்ரி கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் உதவி ஆய்வாளர் கவிதா விசாரித்து வந்தார். இந்த நிலையில், புகாரில் தொடர்புடைய திவாகரன், அவரது தாய் லட்சுமி, தங்கை பிருந்தா, தம்பி ஞானவேல் ஆகியோர் மீது வரதட்சணை, மோசடி பிரிவுகளின் கீழ் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com