வீரராகவப் பெருமாள் திருக்கல்யாண வைபவம்

திருக்கோவிலூர் அருகே குலதீபமங்கலம் ராதா ருக்மணி சமேத வீரராகவப் பெருமாள் கோயிலில் திருமஞ்சன திருக்கல்யாண வைபவம் (படம்)சனிக்கிழமை நடைபெற்றது. 

திருக்கோவிலூர் அருகே குலதீபமங்கலம் ராதா ருக்மணி சமேத வீரராகவப் பெருமாள் கோயிலில் திருமஞ்சன திருக்கல்யாண வைபவம் (படம்)சனிக்கிழமை நடைபெற்றது. 
இந்தக் கோயிலில் ஸ்ரீகைலாசநாதர் ருத்ராபிஷேக விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சியின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, காலை 7 மணிக்கு அரசமரத்து சித்தி விநாயகர் கோயிலில் மகா கணபதி ஹோமமும், மகா அபிஷேகமும் நடைபெற்றன. இரண்டாம் நாளான சனிக்கிழமை, காலை 7 மணிக்கு பிரம்மஸ்ரீ கோவை ஜெயராம பாகவதர் குழுவினரின் உஞ்சவ்ருத்தி ராதா கல்யாணம் மங்கள ஹாரத்தி, காலை 9.30 மணிக்கு தோடயமங்களம் குரு தியானங்கள், அஷ்டபதி திவ்ய நாமம், ஹாரத்தி நடைபெற்றன. 
பிற்பகல் 2.30 மணிக்கு திருக்கோவிலூர் ஸ்ரீஎம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் முன்னிலையில் ஸ்ரீவீரராகவப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஸ்ரீவீரராகவப் பெருமாள் உத்ஸவ மூர்த்திக்கு திருக்கல்யாணம், ஆசிர்வாதம், சுவாமி புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
நிகழ்ச்சியின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக். 19) காலை 6.30 மணிக்கு ஸ்ரீஐயனார் சுவாமிக்கு சிறப்பு மகா அபிஷேகமும், காலை 7.30 மணிக்கு ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் மகா அபிஷேகமும், மஹன்யாசம், ஏகாதச ருத்ர ஜபம், ஹோமம், லலிதா சஹஸ்ரநாமம், பாராயணம், மகா தீபாராதனை நடைபெறுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com