பள்ளி மாணவர்கள் விடுமுறை தினங்களில் நூலகங்களுக்குச் சென்று படிக்க அறிவுரை

பள்ளி மாணவர்கள் விடுமுறை தினங்களில் நூலகங்களுக்குச் சென்று அறிவைப் பெருக்கும் புத்தகங்களைப் படித்து

பள்ளி மாணவர்கள் விடுமுறை தினங்களில் நூலகங்களுக்குச் சென்று அறிவைப் பெருக்கும் புத்தகங்களைப் படித்து பயனுற வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தினார். 
விழுப்புரத்தில் இயங்கி வரும் "உயிர்'  சாலைப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரசுப் பள்ளி நூலகங்களுக்கு 5 ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி,  விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு புத்தகங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.  உயிர் சாலைப் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் ஜெ.வெள்ளையன்,  பள்ளிக்கு புத்தகங்களை வழங்கினார். 
 மாவட்ட நூலகர் சுப்பிரமணியன், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  
விழுப்புரம் நகர காவல் ஆய்வாளர் ராபின்சன் பங்கேற்று, போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
தொடர்ந்து,  விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, உயிர் அமைப்பின் புத்தகங்களைப் பெற்று பேசியதாவது:  அரசுப் பள்ளிக்கு புத்தகங்களை வழங்கிய உயிர் அமைப்புக்கு பாராட்டுகள். விழுப்புரம் பொது நூலகத் துறை சார்பில், பள்ளி மாணவிகளை உறுப்பினர்களாக சேர்த்துள்ளனர்.  
ஆகவே, மாணவ, மாணவிகள் விடுமுறை தினங்களில் நூலகங்களுக்குச் சென்று பயனுள்ள புத்தகங்களைப் படித்து பயன்பெற வேண்டும். 
மேலும், பொதுத் தேர்வு நெருங்குவதால், பாடங்களை நன்றாகப் படித்து, மாவட்டத்துக்கு 100 சதவீத தேர்ச்சியை வழங்கி பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
உயிர் அமைப்பின் நிர்வாகிகள் நாராயணசாமி,  பாஷா,  சந்தோஷ்குமார், தண்டபாணி, குபேந்திரன், குமரன்,  இளங்கோவன் மற்றும் ஆசிரியர்கள்,  மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.  நிகழ்ச்சியில்,  விழுப்புரம் நூலகம் சார்பில் 500 மாணவிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு,  அடையாள அட்டை வழங்கப்பட்டது. 
இதேபோல பிற அரசுப் பள்ளிகளுக்கும் 5,000 புத்தகங்களைப் பிரித்து வழங்க உள்ளதாக உயிர் அமைப்பினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com