குப்பையை தரம் பிரித்து வழங்கியவர்களுக்குப் பரிசு: பெண்களை ஊக்குவிக்கும் நகராட்சி ஆணையர்

கள்ளக்குறிச்சியில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து வழங்கிய குடும்பங்களுக்கு நகராட்சி ஆணையர் கேடயம் வழங்கி பாராட்டினார். 

கள்ளக்குறிச்சியில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து வழங்கிய குடும்பங்களுக்கு நகராட்சி ஆணையர் கேடயம் வழங்கி பாராட்டினார்.
 கள்ளக்குறிச்சியில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் என வீடுகளுக்கு நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்காக நகராட்சி பகுதியில் 5 பரப்புரையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், திறந்தவெளி கழிப்பிடமற்ற நகராட்சியாக கள்ளக்குறிச்சியை மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 இதன் தொடர்ச்சியாக, நகராட்சியில் 17ஆவது வார்டுக்குள்பட்ட கமலா நேரு சாலையில் உள்ள பிரியா என்பவர், நாள்தோறும் குப்பைகளை தரம் பிரித்து இரு கூடைகளில் வழங்கி வந்தார். அதே போல 3ஆவது வார்டுக்குள்பட்ட கேசவலு நகரில் ராஜலட்சுமி என்பவர், வீட்டில் குப்பைகளை சேகரித்து உரமாக மாற்றி மாடியில் கத்திரி, தக்காளி, உருளைக்கிழங்கு, முள்ளங்கி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறி தோட்டம் அமைத்துள்ளார்.
 வசந்தசுசீலா, தெய்வீகம், தென்னகம் ஆகியோரும் குப்பையை உரமாக்கி வீட்டின் மாடிகளில் பூச்செடிகளை வளர்த்து வருகின்றனர்.
 இதுபற்றி அறிந்த நகராட்சி ஆணையர் சா.லட்சுமி, மாடித் தோட்டங்களை பார்வையிட்டு அவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் கேடயத்தை பரிசாக வழங்கினார். மேலும், செடிகளையும் வழங்கினார். அப்போது, நகராட்சி பொறியாளர் அருண், துப்புரவு ஆய்வாளர் செல்வக்குமார், திடக்கழிவு மேலாண்மை திட்ட மேற்பார்வையாளர் பரிமளா மற்றும் பரப்புரையாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com