ராகவேந்திர சுவாமிகள் அவதார தின விழா

விழுப்புரம் வண்டிமேடு ராகவேந்திரர் கோயிலில், ராகவேந்திரரின் 423-ஆவது அவதார தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 

விழுப்புரம் வண்டிமேடு ராகவேந்திரர் கோயிலில், ராகவேந்திரரின் 423-ஆவது அவதார தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 வண்டிமேடு ராகவேந்திரர் கோவிலில் அவதார தின விழா காலை 5 மணிக்கு சுப்ரபாதத்துடன் தொடங்கியது. ஸ்தோத்ர பாராயணம் பாடினர். 7 மணிக்கு வண்டிமேடு ராஜகணபதி கோயிலிலிருந்து ராகவேந்திர சுவாமிகள் ஆலயம் வரை 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு சுவாமிக்கு நிர்மால்ய அபிஷேகமும், பஞ்சாமிர்த அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 6 மணிக்கு குருவாரா பஜனை மண்டலி சார்பில் ஹரிபஜன் நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு சுவாமிக்கு மகாதீபாராதனையும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, ராகவேந்திர சுவாமிகளை வழபட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com