ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினர் கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்த நாள் விழா, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை அதிமுகவினரால் நல

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்த நாள் விழா, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை அதிமுகவினரால் நல உதவிகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
செஞ்சி: விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் செஞ்சியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
செஞ்சி கூட்டு சாலையில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா உருவ படத்துக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலரும் ஆரணி எம்பியுமான செஞ்சி வெ.ஏழுமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தி காலை முதல் மாலை வரையான தொடர் அன்னதானத்தைத் தொடக்கி வைத்தார்.
விழாவில் செஞ்சி நகர நிர்வாகிகள் நகர தலைவர் சவுக்கார், ராஜேந்திரன், ஜெ.பாஸ்கர், ராமமூர்த்தி, அனந்தபுரம் சங்கர், பேரவை ஒன்றியச் செயலர் பூங்குன்றன் மாவட்ட மாணவரணி துணைச் செயலர்
ஜெ.கமலக்கண்ணன், கிளைச் செயலர் வீரப்பன், முனுசாமி, படையப்பா, அமீத், மணி உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி: ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு தலைமை வகித்தார். ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தி, தொடர் அன்னதானத்தைத் தொடக்கி வைத்தார். க.காமராஜ் எம்.பி, விவசாயப் பிரிவு மாவட்ட செயலாளர் கதிர்.தண்டபாணி, கள்ளக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் அ.ராஜசேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தியாகதுருகம் ஒன்றியச் செயலாளர் வெ.அய்யப்பா, முன்னாள் எம்.எல்.ஏ. க.அழகுவேலு பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ப.தங்கபாண்டியன், விவசாய கூட்டுறவு சங்கத் தலைவர் அ.ரங்கன்,ஜெயலலிதா பேரவையின் முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.ஞானவேலு, கூட்டுறவு வீடு கட்டும் சங்க துணைத் தலைவர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரச் செயலாளர் எம்.பாபு நன்றி கூறினார்.
தியாகதுருகம் ஒன்றிய அதிமுக சார்பில் கலையநல்லூரில் செயலாளர் வெ.அய்யப்பா ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், கட்சிக் கொடியை ஏற்றிவைத்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.
சிறுபான்மை பிரிவு செயலாளர் எஸ்.ஜான்பாஷா, ஒன்றிய துணை செயலாளர் ராஜவேலு, முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி, நகர அவைத் தலைவர் அய்யம்பெருமாள், ஒன்றிய பாசறைத் தலைவர் பரியாஸ், கூட்டுறவு கடன் சங்க தலைவர் தமிழரசி குமரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழுப்புரம்: விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகம் எதிரே ஜெயலலிதாவின் உருவப்படத்தை அலங்கரித்து வைத்து, அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற் சங்கத்தினர், ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாவட்ட தொழிற் சங்கத் தலைவர் துரைசாமி தலைமை வகித்து தொழிற் சங்க கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
விழுப்புரம் மண்டல செயலாளர் உதயகுமார், முதல் பணிமனைச் செயலாளர் முத்துராமன், தலைவர் ராஜேந்திரன், ஏழுமலை, மத்திய பணிமனை செயலாளர் ராமலிங்கம், மணிமாறன், ரமேஷ் உள்ளிட்ட தொழிற் சங்கத்தினர் பங்கேற்று, ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பொது மக்களுக்கும், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும் இனிப்புகள் வழங்கினர்.
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் எதிரே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு அக்கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டப்
பேரவை உறுப்பினருமான இரா.குமரகுரு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
ஒன்றியச் செயலர் ஜி.மணிராஜ், நகரச் செயலர் எஸ்.துரை, முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவர் இரா.சாய்ராம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வளர்மதி பாண்டியராஜ், நகர இளைஞரணி
சௌ.இராமலிங்கம், முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.கே.இராமசாமி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஆர்.பழனிவேல், ஒன்றிய நிர்வாகி எஸ்.சக்திவேல், நகர துணைச் செயலர் கஜேந்திரன் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
மணம்பூண்டி: திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டியில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, முன்னாள் ஒன்றியச் செயலர் ஆர்.சீனுவாசன் தலைமை வகித்தார். இலக்கிய அணி ஒன்றியச் செயலர் ஜி.கமலக்கண்ணன், மாணவரணி ஒன்றியச் செயலர் எஸ்.துரை, விவசாய அணி ஒன்றியச் செயலர் வி.தவசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.குரு வரவேற்றார்.
ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து கட்சியினர் மரியாதை செலுத்தினர். பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினர். எம்ஜிஆர் மன்ற ஒன்றிய இணைச் செயலர் ஆர்.மணி, மாவட்ட பிரதிநிதி ஜி.தாமோதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வல்லம்: வல்லம் ஒன்றிய அதிமுக செயலர் கு.விநாயகமூர்த்தி தலைமையில் நாட்டார்மங்கலம் கூட்டுசாலையில் கட்சிக் கொடியேற்றி அங்கு அமைக்கப்பட்ட ஜெயலலிதா உருவ படத்துக்கு மரியாதை செலுத்தி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவர் பரிமளா பன்னீர்செல்வம், ஒன்றிய அவைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய பொருளர் மனோகரன், பாசறைத் தலைவர் பாலமுருகன், சித்தாமூர் பூபதி, சுபாரன், ஏ.பி.எஸ்.தமிழ், களவாய் சேகர், மேல்சேவூர் நடராஜன், மாவட்ட கவுன்சிலர் வெங்கடேசன் மற்றும் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினகரன் அணி சார்பில்...
உளுந்தூர்பேட்டை/கள்ளகுறிச்சி, பிப். 24 : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் அவரது சிலைக்கு டிடிவி தினகரன் அணியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கே.ஜி.பி.ஞானமூர்த்தி சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஏழைகள் 100 பேருக்கு இலவச வேட்டி - சேலை வழங்கினார். பின்னர் அங்கு கூடியிருந்த மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதையடுத்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை பிறந்த 4 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் கேசவன், நகரச் செயலாளர் தாண்டவராயன், மாவட்ட இளைஞரணி செயலாளர் உதயகுமார், ஆனத்தூர் கூட்டுறவு சங்க தலைவர்
ஐ.சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கள்ளகுறிச்சியில் டிடிவி தினகரன் அணி சார்பில் கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கே.ஜி.பி ஞானமூர்த்தி தலைமை வகித்து அன்னதானத்தை தொடக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார். பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், ஏழை மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்டவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில், நகரச் செயலாளர் பி.ஜெயப்பிரகாஷ், ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.கே.செழியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை எஸ்.எம்.சர்புதீன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு சி.எஸ்.சம்பத்குமார், நகர கழக துணைச் செயலாளர் டி.ராஜசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com