சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா

செஞ்சி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

செஞ்சி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
 செஞ்சி வட்டம், மேல்புதுப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு திண்டிவனம் அரசுக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் அ.தண்டபாணி தலைமை வகித்தார். செயலர் சே.காத்தவராயன் வரவேற்றார்.
 மானந்தல் பள்ளி ஆசிரியர் அ.பழனி, வடபாலை கிராம நிர்வாக அலுவலர் ஆ.காளிதாஸ், மேல்புதுப்பட்டு அங்கன்வாடி மைய ஆசிரியர் ஏ.கலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, பேச்சு, கட்டுரை, ஓவியம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
 அதேபோல, அனந்தபுரம் நுகர்வோர் கண்காணிப்புக் குழு சார்பில் அனந்தபுரம் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு விக்கிரவாண்டி வட்ட நுகர்வோர் கண்காணிப்பு குழு உறுப்பினர் அ.ஜேசுஜூலியஸ்ராஜா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சாந்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பேரூராட்சிச் செயல் அலுவலர் ஷேக்லத்திப் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
 அவலூர்பேட்டையில் நடைபெற்ற விழாவில் அங்கு அமைக்கப்பட்ட விவேகானந்தரின் உருவ படத்துக்கு அவலூர்பேட்டை ராஜாதேசிங்கு பள்ளி நிர்வாகத்தின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அரிமா சங்க நிர்வாகிகள், தமிழ்ச் சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டு விவேகானந்தரின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
 திருக்கோவிலூரில்...: திருக்கோவிலூர் அருகே ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கோ.முரளிதரன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ச.சின்னதம்பி முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் அன்பழகன் வரவேற்றார்.
 விழாவில் பங்கேற்ற தமிழ்ச் சங்கத் தலைவர் சு.ராஜேந்திரன், விவேகானந்தர் பற்றிய பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
 கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், சுவாமி விவேகானந்தர் பேரவையினர் பங்கேற்று, குளத்துமேட்டு சாலையில் விவேகானந்தரின் சிலையை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மகாதேவன் தலைமை வகித்தார். விவேகானந்தர் தேசிய பேரவை பி.எஸ்.ஆர் மகாதேவன் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் வி.முத்துசாமி வரவேற்றார்.
 வழக்குரைஞர் டி.சின்னத்தம்பி, தொழிலதிபர்கள் வி.முத்துசாமி, பி.எம்.எம்.பெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, விவேகானந்தரின் பொன்மொழிகளைக் கூறி அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com