பொங்கல் பாதுகாப்பு: ஏடிஎஸ்பிக்கள் தலைமையில் 11 அதிகாரிகள் கண்காணிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்ட 11 அதிகாரிகள் தலைமையில் போலீஸ் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பொங்கல் பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்ட 11 அதிகாரிகள் தலைமையில் போலீஸ் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பொங்கல் பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர். சனிக்கிழமை போகிப் பொங்கல் தொடங்கி, தைப் பொங்கல், ஆற்றுத் திருவிழா கொண்டாட்டம் வரை பாதுகாப்பை மேற்கொள்ள 11 அதிகாரிகள் கொண்ட குழுவினரை காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நியமித்துள்ளார்.
விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனுசுயாடெய்சிஎர்னஸ்ட் திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் உள்கோட்டத்துக்கும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை உள்கோட்டத்துக்கும், துணைக் கண்காணிப்பாளர் விஜயராமன் வளவனூர், கண்டமங்கலம் பகுதிகளுக்கும், துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு சங்கராபுரம், மணலூர்பேட்டைக்கும், துணை கண்காணிப்பாளர் வெள்ளைசாமி திருவெண்ணெய்நல்லூர், திருநாவலூர் பகுதிகளுக்கும், ஆய்வாளர்கள் பிரேமா, மரியசோபிமஞ்சுளா, சிவகாமி, எழிலரசி, அனுமந்தன், ருக்மங்காதன் ஆகியோரும் பொறுப்பு அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டு, குறிப்பிட்ட பகுதிகளைக் கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்
டுள்ளது.
இவர்கள், அந்தந்த பகுதி காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து, பிரச்னைக்குரிய, பதட்டமான பகுதிகளைக் கண்காணித்து, பொங்கல், ஆற்றுத் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 232 பேர் கைது: மாவட்டத்தில் கடந்த 10-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்களாக பொங்கல் பண்டிகையொட்டி, மது கடத்தல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சோதனையின்போது, சனிக்கிழமை வரை 249 வழக்குகள் பதியப்பட்டு, சாராயம், மதுகடத்தலில் ஈடுபட்ட 34 பெண்கள் உள்ளிட்ட 232 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார், டிராக்டர், மினி லாரி, 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில், 15 ஆயிரத்து 900 லிட்டர் சாராய ஊரலும், 3,301 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. 5,920 வெளி மாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com