கராத்தே பள்ளியில் முப்பெரும் விழா

திருக்கோவிலூர் ஷோட்டாகான் கராத்தே பயிற்சிப் பள்ளியில் முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

திருக்கோவிலூர் ஷோட்டாகான் கராத்தே பயிற்சிப் பள்ளியில் முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.
கராத்தே பள்ளி ஆண்டு விழா, பரிசளிப்பு விழா, நூல் வெளியீடு ஆகியவை முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டன.
விழாவுக்கு, திருக்கோவலூர் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் மு.கலியபெருமாள், மணலூர்பேட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் தா.சம்பத், கோவலடிகள் ம.ரா.குமாரசாமி அறக்கட்டளை நிறுவனர் தணிகை.கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை பயிற்சியாளர் என்.கே.முருகன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக திருக்கோவிலூர் சார்-ஆட்சியர் சாருஸ்ரீ கலந்துகொண்டு, கராத்தே போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வண்ணப் பட்டை, கோப்பை, சான்றிதழ் வழங்கினார்.
மாவட்ட நூலக அலுவலர் இரா.சுப்பிரமணியன் தற்காப்புக் கலையின் முன்னோடி புருஸ்லீ வாழ்க்கை வரலாறு நூலை
வெளியிட, முதன்மை பயிற்சியாளர் கியோஷி சி.நடராஜ் பெற்றுக்கொண்டார்.
வழக்குரைஞர்கள் கே. உமாசங்கர், பழனி.பாலாஜி, நல்நூலகர் மு.அன்பழகன், தமிழ்ச் சங்க துணைத் தலைவர் பா.கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஏற்பாடுகளை கருப்புப் பட்டை பயிற்சியாளர்கள் வே.அருள்பாலன், எஸ்.தேவா, எஸ்.சற்குணா ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com