அன்புமணியை விமர்சித்த அமைச்சருக்கு பாமக கண்டனம்

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாûஸ நாகரீகமற்ற முறையில் விமர்சித்துப் பேசிய உயர் கல்வி அமைச்சர் அன்பழகனுக்கு விழுப்புரம் மாவட்ட பாமக கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாûஸ நாகரீகமற்ற முறையில் விமர்சித்துப் பேசிய உயர் கல்வி அமைச்சர் அன்பழகனுக்கு விழுப்புரம் மாவட்ட பாமக கண்டனம் தெரிவித்துள்ளது.
 விழுப்புரத்தில் ஒருங்கிணைந்த பாமக மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாநில துணைப் பொதுச் செயலர் தங்க.ஜோதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.புகழேந்தி வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலர்கள் சி.சிவக்குமார், ஆர்.ரமேஷ், மாவட்டச் செயலர்கள் கனல்.பெருமாள், பால.சக்தி, க.சரவணன், ஏ.சேது, முன்னாள் மாவட்டச் செயலர் பா.பழனிவேல், மாவட்ட துணைச் செயலர்கள் மணிகண்டன், வி.அரிகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மாநில அமைப்புச் செயலாளர் மீ.க.செல்வகுமார், மாநில துணைத் தலைவர் ந.ம.கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 தருமபுரி தொகுதியில் சிப்காட் அமைப்பதாக பல முறை அறிவித்தும், அதனை செயல்படுத்த முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளதாக கூறிய அன்புமணி ராமதாஸ் எம்பியை நாகரிகமற்ற முறையில் விமர்சனம் செய்த உயர் கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகனை விழுப்புரம் ஒருங்கிணைந்த பாமக மாவட்ட கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
 அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்து புகையிலை ஒழிப்பு, 108 அவசர ஊர்தித் திட்டம், தேசிய சுகாதாரத் திட்டம் உள்ளிட்டப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, இந்தியா மட்டுமன்றி, ஐநாவின் பாராட்டையும் பெற்றவர். தமிழகத்தின் தகுதி வாய்ந்த திறமையான தலைவராக உள்ள அவரை, மோசமாக விமர்சித்துப் பேசிய, அமைச்சர் அன்பழகன் விழுப்புரம் மாவட்டத்துக்கு எப்போது வந்தாலும், கடுமையான எதிர்ப்பை தெரிவிப்போம்.
 மன்னிப்பு கேட்கும் வரை அவரை மாவட்டத்துக்குள் நுழைய விடமாட்டோம் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com