கோ-கோ விளையாட்டு போட்டி பரிசளிப்பு

விழுப்புரத்தில் நடைபெற்ற கோ-கோ போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது.

விழுப்புரத்தில் நடைபெற்ற கோ-கோ போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது.
விழுப்புரத்தில் விவசாய ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில்,  மண்டல அளவிலான முதலாமாண்டு கோ-கோ போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. 
 அரசூர் வி.ஆர்.எஸ்.  பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில்,  விழுப்புரம், வளவனூர்,  அரசூர்,  கள்ளக்குறிச்சி,  கடலூர்,  புதுவை பகுதிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
போட்டியின் நிறைவு நாள் மற்றும் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.  விழுப்புரம் விவசாய ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலிடம் பெற்றது.  கடலூர் மஞ்சகுப்பம்  புனித வளனார் மேல்நிலைப் பள்ளி அணி இரண்டாம் இடத்தை பிடித்தது.  அரசூர் வி.ஆர்.எஸ்.கல்லூரி அணி மூன்றாம் இடம் பெற்றது.  
கள்ளக்குறிச்சி கே.கே.சி அணி நான்காம் இடத்தை பிடித்தது.  இவர்களுக்கு பரிசுத் தொகை,  பரிசுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
புதுவை பாகூர் திரி ஸ்டார் கோ-கோ கிளப் நிர்வாகி கனகராஜ்,  திருச்சி திருப்பைஞ்சிலி அரசுப் பள்ளி உடல்கல்வி இயக்குநர் பாலகிருஷ்ணன்,  கடலூர் புனித வளனார் பள்ளி ஆசிரியர் தேவக்குமார் ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.   
விவசாய ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி சிறுவானூர் அ.அருண்குமார்,  வி.ஆர்.எஸ். கல்லூரி ஆசிரியர் முரளி,  மோகன்ராஜ்,  சதீஷ் உள்ளிட்டோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com