சுவர் விளம்பரம் அவமதிப்பு: பாமகவினர் சாலை மறியல்

திருவெண்ணெய்நல்லூர் அருகே தியாகிகள் தினத்தையொட்டி எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாமகவினர் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே தியாகிகள் தினத்தையொட்டி எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாமகவினர் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே காரப்பட்டு கிராமத்தில் நிழல்குடை உள்ளது. இந்த  நிழற்குடை கட்டடத்தில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தை மர்ம நபர்கள் அவமதித்துவிட்டு சென்றிருந்தனராம்.
இதனால், ஆத்திரமடைந்த  பாமகவினர், பாமகவினர் எழுதும் சுவர் விளம்பரங்கள் மட்டும் தொடர்ச்சியாக மர்ம நபர்களால் அவமதிப்பு செய்யப்பட்டு வருவதாகவும், சுவர் விளம்பரத்தை அழித்த மர்ம  நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அந்தப் கிராமத்தில் உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சுவர் விளம்பரத்தை அவமதிப்பு செய்த மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்தனர். அதன்பேரில், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அந்தச் சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com