அண்ணா பிறந்த நாள்: கட்சியினர் மரியாதை

அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம், செஞ்சியில் திமுக மற்றும் எம்ஜிஆர் மன்றத்தினர் சனிக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம், செஞ்சியில் திமுக மற்றும் எம்ஜிஆர் மன்றத்தினர் சனிக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 110-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழுப்புரத்தில் கலைஞர் அறிவாலயம் முன் உள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு திமுக மத்திய மாவட்டச் செயலர் க.பொன்முடி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாநில சட்டத்துறைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி. சுகவனம், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஜனகராஜ், நகரச் செயலாளர் சக்கரை, இளைஞரணி அமைப்பாளர் தினகரன், தளபதி நற்பனி மன்றத் தலைவர் பொன்.கௌதமசிகாமணி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செஞ்சி
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், செஞ்சி பேருந்து நிலையம் முன் உள்ள அண்ணா சிலை மற்றும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் செஞ்சிமஸ்தான் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சிக்கு செஞ்சி நகரச் செயலாளர் காஜாநஜீர் தலைமை வகித்தார். செஞ்சி ஒன்றியச் செயலாளர் ஆர்.விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், விவசாய அணி அரங்க.ஏழுமலை, ஜான்பாஷா, அவைத் தலைவர் பார்சுதுரை, தொண்டர் அணி பாஷா, துணைச் செயலாளர்கள் சங்கர், செயல்மணி, தமிழ்ச்செல்வி கர்ணன், காஜாபாஷா, பத்மநாபன், தொழில்நுட்ப அணி கே.எஸ்.எம்.மொக்தியார்அலி, இஸ்மாயில், பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எம்ஜிஆர் மன்றம் சார்பில்...
விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில், செஞ்சி கூட்டுச் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப் படத்துக்கு வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் வெ.ஏழுமலை எம்.பி., மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் அதிமுக செஞ்சி ஒன்றியச் செயலர் அ.கோவிந்தசாமி, செஞ்சி நகர கூட்டுறவு வங்கித் தலைவர் வி.ரங்கநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெகதீசன், நிர்வாகிகள் லட்சுமிகாந்தன், அனந்தபுரம் சங்கர், ராஜேந்திரன், ஜெ.பாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com