கூட்டுறவு, தேசிய வங்கிகளில் விவசாயக் கடன் தள்ளுபடி ஆகவில்லை

கர்நாடகத்தில் காங்கிரஸ்- ம.ஜ.த. கூட்டணி ஆட்சியில் கூட்டுறவு,  தேசிய  வங்கிகள் விவசாயிகள் வாங்கியுள்ள

கர்நாடகத்தில் காங்கிரஸ்- ம.ஜ.த. கூட்டணி ஆட்சியில் கூட்டுறவு,  தேசிய  வங்கிகள் விவசாயிகள் வாங்கியுள்ள கடன்கள் தள்ளுபடி ஆகவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மாநிலத் தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
கலபுர்கியில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: -
கர்நாடகத்தில்  விவசாயிகள் வாங்கியுள்ள கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக காங்கிரஸ்,  ம.ஜ.த. ஆகிய இரு கட்சியினரும் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகளில் உள்ளிட்ட எந்த வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கியுள்ள கடன்கள்  இதுவரை தள்ளுபடி செய்யவில்லை.  விவசாயிகள் கடன் தள்ளுபடி என்பது வெறும் அறிவிப்பு அளவில் மட்டுமே உள்ளது. 
வறட்சியால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எந்த மாவட்டத்திலும் வறட்சிக்கான நிவாரணத்தை வழக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். எனவே வறட்சி நிவாரணத்தை உடனடியாக வழங்கி, விவசாயிகள் வாங்கிய கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். 
கர்நாடகத்தின் நிதி நிலைமை படுமோசமாக உள்ளது. எனவே நிதியை உயர்த்தத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதேபோல தலித், பழங்குடியின மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக வழங்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கர்நாடகத்தில் கூட்டணி அரசின் ஆட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் எதுவுமில்லாமல் முடங்கிப் போய் உள்ளது. ஆனால் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுகிறது. இருந்தாலும், காங்கிரஸ் கட்சியினர் பிரதமரைத் தேவையில்லாமல் விமர்சனம் செய்து வருகின்றனர். 
கர்நாடகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு கட்சியினரின் ஒற்றுமை இல்லாததே காரணம் என்று கூறுவதை ஏற்கமுடியாது. என்ராலும் பாஜக வேட்பாளர்களின் தோல்வியை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். 
இதுதொடர்பாக நவம்பர்  13-ஆம் தேதி பாஜக உயர்மட்டக் குழுவில் தோல்வி குறித்து விவாதிக்கப்படும் என்றார் எடியூரப்பா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com