தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் 97-ஆவது ஆண்டுவிழா

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் 97-ஆவது ஆண்டுவிழா பெங்களூருவில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது .


தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் 97-ஆவது ஆண்டுவிழா பெங்களூருவில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது .
தமிழகத்தின் தூத்துக்குடி நகரில் 1921-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் 97-ஆண்டுவிழா பெங்களூருவில் மகாத்மா காந்தி சாலையில் உள்ள அந்த வங்கிக் கிளையில் திங்கள்கிழமை நடைபெற்றது. வங்கிக் கிளை மேலாளர் எம்.ரகுநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவை வங்கியின் பழம்பெரும் வாடிக்கையாளர்கள் பி.ஆர்.மோகன்- நளினி தம்பதி, பிரியா ஸ்ரீகாந்த், சேகர், கன்னியாஸ்திரி லாரென்சியா உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தனர். இந்நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் வங்கி மேலாளர் எம்.ரகுநாதன் பேசியது: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு கர்நாடகம் முழுவதும் 20 கிளைகள் உள்ளன.பெங்களூருவில் பி.வி.கே.ஐயங்கார் சாலை, மகாத்மா காந்தி சாலையில் இரு கிளைகள் உள்ளன. மகாத்மா காந்தி சாலையில் உள்ள கண்டோன்மென்ட் கிளை 1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் இருந்தே ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வங்கியோடு இணைந்திருக்கிறார்கள். 2017-18-ஆம் ஆண்டில் நடப்பு மற்றும் சேமிப்புக்கணக்கு தொடங்குவதில் முதலிடம் பிடித்து விருது பெற்றோம். அதேபோல, யுனைடெட் இந்தியா இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து காப்பீட்டுத் திட்டங்களை விற்பனை செய்வதில் சாதனை படைத்து 2016-17-இல் விருது பெற்றோம். நிகழ் நிதியாண்டில் கிளையின் மொத்த வர்த்தகம் ரூ.472 கோடியாகும். இந்த காலக்கட்டத்தில் வைப்புத்தொகை ரூ.370 கோடி, கடன் வழங்கல் ரூ.102 கோடியாக உள்ளது.
சிறுதொழில் மற்றும் வியாபாரிகளுக்கு தனித்தனியே கடன் திட்டங்கள் உள்ளன. கார், வீட்டுவசதி, கல்விக் கடன்களும் இருக்கின்றன. எங்கள் வங்கியில் வீட்டு வசதிக் கடன் 8.95 சத வட்டியில் வழங்கப்படுகிறது. முத்துக்குவியல், நவரத்ன மாலா ஆகிய வைப்புத்தொகை திட்டங்களும் உள்ளன. குறைந்த வட்டியில் கடன் அளிப்பதால் எங்கள் கடன் திட்டங்களுக்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com