கஜா புயல் எச்சரிக்கை: மீனவ கிராமங்களில் எம்எல்ஏ ஆலோசனை

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட மீனவ கிராமங்களில், கஜா புயலில் இருந்து

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட மீனவ கிராமங்களில், கஜா புயலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் புதன்கிழமை இரவு ஆலோசனை மேற்கொண்டார்.
தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட சின்னங்குடி, காலமநல்லூர், பெருமாள்பேட்டை, சந்திரபாடி உள்ளிட்ட மீனவ கிராமங்களின் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து, சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் ஆலோசனை நடத்தினார். அப்போது, பழுந்தடைந்த தொகுப்பு வீடுகளில் வசிப்பவர்கள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட வேண்டும், கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும், கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களைத் தங்க வைப்பதற்கு புயல் பாதுகாப்பு மையங்கள், பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அப்போது, ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டாட்சியர் சுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருண், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நல்லமுத்து உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com