டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு

மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக செயல்படும் டாஸ்மாக் கடையை

மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அரசியல் கட்சியினர் கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
மயிலாடுதுறையில் போக்குவரத்து நிறைந்த பாரத ஸ்டேட் வங்கி சாலையில் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
எனவே, இந்த டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து அரசியல் கட்சியினர் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் மயிலாடுதுறையில் மக்கள் நலக் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரா. முரளிதரன்தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் கோ. தேன்மொழியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 
பாமக மாநிலத் துணைத் தலைவர் தங்க.அய்யசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகை மாவட்டச் செயலர் பி. ரவிச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஷேக்  அலாவுதீன், மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தாஜூதீன், நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலர் காளிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com