பெங்களூரு

"குழந்தைகளின் செவித் திறனை சோதிப்பது அவசியம்'

DIN

குழந்தைகளின் செவித்திறனை இளம் வயதிலேயே சோதித்து பார்ப்பது அவசியம் என்று அன்வி செவித்திறன் மேம்பாட்டு மைய செயல் அதிகாரி விஷால்ஷா தெரிவித்தார்.
பெங்களூரு இந்திராநகரில் வெள்ளிக்கிழமை அம்மையத்தின் புதிய கிளை தொடக்கவிழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது: 
அண்மைக்காலமாக இந்தியாவில் 6 பேரில் ஒருவருக்கு காதுகேளாமை பிரச்னை ஏற்படுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் காதுகேளாத பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். தற்போது நவீன தொழில்நுட்பங்கள் கண்டறிப்பட்டுள்ளதால், குழந்தைகளின் செவித்திறனை இளம் வயதிலேயே சோதித்து பார்ப்பது அவசியம். 
செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய சிகிச்சையோ, அல்லது காதுகேட்கும் கருவியைப் பொருத்தினால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். காலம் கடந்து செய்யும் பரிசோதனையால், பிரச்னைகள் பெரிதாகின்றன. குழந்தைகள், முதியோர்களுக்கு செவித்திறன் பரிசோதனையை சேவையாக தொடர்ந்து செய்து வருகிறோம். 
பெங்களூரைத் தொடர்ந்து சென்னை, அவினாசி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களிலும், எங்கள் சேவையைத் தொடர முடிவு செய்துள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT