வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி

வங்கித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்க சித்தார்த்தா அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

வங்கித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்க சித்தார்த்தா அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை:
சித்தார்த்தா கல்வி மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு சங்கத்தின் ஒத்துழைப்புடன் சித்தார்த்தா அறக்கட்டளை சார்பில் பெங்களூரில் நவ.28-ஆம் தேதி முதல் வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பெங்களூரில் விஜயநகரில் உள்ள ஞானகங்கோத்ரி பயிற்சி மையத்தில் நடக்கும் இந்த பயிற்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். 
பயிற்சி வகுப்பில்சேர பெங்களூரு நகரம்மற்றும் ஊரக மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்சி, எஸ்டி பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வார நாள்களில் 2 மாதங்களுக்கு தினமும் 4 மணிநேரம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
முதல்கட்டமாக 30 மாணவர்களுக்கு மட்டும் பயிற்சி தரப்படுகிறது. இதில் 20 எஸ்சி, எஸ்டி மாணவர்களும், 10 பிற வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பயிற்சியில் சேரவிரும்பும் தகுதி வாய்ந்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் சேர்க்கை அளிக்கப்படும். விண்ணப்பங்களை செயலாளர், சித்தார்த்தா அறக்கட்டளை, சித்தார்த்தா மாநாட்டு மையம், 17, 26-ஆவது மெயின், எச்எஸ்ஆர் லேஅவுட், பெங்களூரு-560102 என்ற முகவரி அல்லது  coachingatjg@gmail.com  என்ற மின்னஞ்சலில் நவ.27-ஆம் தேதிக்குள் அணுகலாம்.  மேலும் விவரங்களுக்கு மோகன்குமாரை 9620030679 என்ற செல்லிடப்பேசி  எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com