"4 ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்த மருத்துவர்களுக்கு பணி நிரந்தரம்'

அரசு மருத்துவமனைகளில் 4 ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்த மருத்துவர்களின் பணி நிரந்தரமாக்கப்படும் என முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

அரசு மருத்துவமனைகளில் 4 ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்த மருத்துவர்களின் பணி நிரந்தரமாக்கப்படும் என முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
தாவணகெரேயில் சனிக்கிழமை நடைபெற்ற கர்நாடக மாநில அரசு மருத்துவ அதிகாரிகள் சங்க மாநில மாநாட்டை தொடக்கி வைத்து அவர் பேசியது: கர்நாடக அரசின் மருத்துவமனைகளில் கடந்த 4 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியுள்ள மருத்துவர்களின் பணி நிரந்தரமாக்கப்படும். அதேபோல, சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 24 ஆயிரம் பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன. 
ஆரோக்கிய கர்நாடகம் திட்டத்தில், மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் மருத்துவக் காப்பீட்டு வசதிகளை செய்துதர திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தில் பிபிஎல் அட்டைதாரர்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையும், ஏபிஎல் அட்டைதாரர்கள் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரையும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ள காப்பீட்டுத் தொகை அளிக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு ரூ.900 கோடியும், மத்திய அரசு ரூ.200 கோடியும் அளிக்கின்றன என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல், "கர்நாடக மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு பதவிக்கு வந்த பிறகு, கடந்த 6 மாதங்களில் 450 மருத்துவர்களை அரசு மருத்துவமனையில் நியமனம் செய்துள்ளோம்.
கர்நாடகத்தில் பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. பன்றிக் காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்ட 674 பேரில் 19 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கும்படி மருத்துவ அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம். மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் பன்றிக் காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com