காவல் நிலையத்தில் மது அருந்தி நடனம்: உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

காவல் நிலையத்தின் மது அருந்திவிட்டு நடனமாடியதாக எழுந்த புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


காவல் நிலையத்தின் மது அருந்திவிட்டு நடனமாடியதாக எழுந்த புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோலார் தங்கவயல் அருகேயுள்ள பேத்தமங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் ஹொன்னேகவுடா. இவர் அண்மையில் காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்தபோது, சீருடை அணியாமல், பனியன், கால் சட்டையுடன் கப்பர்சிங் என்ற தெலுங்கு படத்தின் பாடல் ஒலிக்க, ஒரு கையில் செல்லிடப்பேசியும், மற்றொரு கையில் தடியை வைத்தபடி நடனமாடினாராம். மேலும் அங்கிருந்த கைதி ஒருவரையும் அதேபோல நடனமாடுமாறு மிரட்டினாராம்.
இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் சனிக்கிழமை வேகமாக பரவியது.
இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் ஹொன்னேகெளடாவை பணியிடை நீக்கம் செய்து, கோலார் தங்கவயல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோகேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com