நவ. 29-இல் பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு தொடக்கம்

நவ. 29-ஆம் தேதி முதல் டிச. 1-ஆம் தேதி வரை பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு நடைபெற உள்ளது.

நவ. 29-ஆம் தேதி முதல் டிச. 1-ஆம் தேதி வரை பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு நடைபெற உள்ளது.
இதுகுறித்து விதான செளதாவில் செவ்வாய்க்கிழமை தொழில்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறியது: 
சர்வதேச அளவில் பல்வேறு தொழில்நுட்பங்கள் அதிகரித்து வருகின்றன. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் சிறந்து விளங்குகிறது. புதிய தொழில்நுட்பங்கள் வருவதற்கு ஏற்ப, அதனை பயன்படுத்துவதற்கு நாமும் தயாராக வேண்டும். 
எனவே, தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் வகையில் நவ. 29-ஆம் தேதி முதல் டிச. 1-ஆம் தேதிவரை பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் சர்வதேச அளவிலான 3773 தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் 246 அரங்கங்கள் இடம்பெறும். அதில் 100 புதிதாக தொடங்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களும், 9 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன. மாநாட்டில் 11 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
மாநாட்டில் நவீன தொழில்நுட்பத் துறையினர் சந்தித்து வரும் சவால்கள், பிரச்னைகளை குறித்து விவாவதிக்கப்பட உள்ளது என்றார். பேட்டியின் போது, தகவல், தொழில்நுட்பத் துறை ஆலோசகர் ராஜ்குமார் ஸ்ரீவாத்சவா, வினோத்பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com