பெங்களூரு

6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் சேவை: முதல்வர் இன்று தொடக்கிவைக்கிறார்

DIN

பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் சார்பில் 6 பெட்டிகள் கொண்ட 3-ஆம் கட்ட மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் குமாரசாமி வியாழக்கிழமை தொடக்கிவைக்கிறார்.
பெங்களூரு வடக்கு-தெற்கு பகுதியில் பச்சை வழித்தடம் மற்றும் கிழக்கு-மேற்கு பகுதியில் ஊதா வழித்தடத்தில் மெட்ரோ ரயில் கழகம் சேவை வழங்கி வருகிறது. பையப்பனஹள்ளி முதல் நாயண்டஹள்ளி வரையிலான ஊதா வழித்தடம், நாகசந்திரா முதல் யலச்சேனஹள்ளி வரையிலான பச்சை வழித்தடம்  முழுமையாக செயல்படுவருகிறது. 
இருவழித் தடங்களிலும் 3 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கூட்டநெரிசல் அதிகமிருக்கும் நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்கி நிலைமையை சமாளித்து வந்த மெட்ரோ ரயில்கழகம், தற்போது நிரந்தரமாக 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களை இயக்க உள்ளது. ஏற்கெனவே 2 கட்டங்களில் 6 பெட்டிகள் கொண்ட ரயில் சேவை தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு டாக்டர் அம்பேத்கர் விதான செளதாவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் நவ.22-ஆம் தேதி காலை 10.30மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் 6 பெட்டிகள் கொண்ட 3-ஆம் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் குமாரசாமி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வர், கனரகத் தொழில்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், மெட்ரோ ரயில் கழக மேலாண் இயக்குநர் அஜய்சேத் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
தற்போது இயக்கப்பட்டுவரும் 3 பெட்டிகளுடன் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. 3 பெட்டிகளில் தற்போது 900 பயணிகள் பயணம் செய்துவருகிறார்கள். 6 பெட்டிகள் கொண்ட ரயிலில் 2 ஆயிரம் பேர் பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT