பெங்களூரு

கர்நாடக அரசுக்கு எதிராக தொடர் போராட்டம்: எடியூரப்பா

DIN

விவசாயிகள் நலனைப் புறக்கணிக்கும் மஜத-காங்கிரஸ் அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரு மைசூரு வங்கி சதுக்கத்தில் புதன்கிழமை விவசாயிகளை முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு புறக்கணிப்பதாகக் கூறி, பாஜகவினர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தலைமை வகித்து எடியூரப்பா பேசியது: 
கர்நாடத்தில் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து விவசாயிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்.  இதனால், விவசாயிகள் தெருவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.  போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை குண்டர்கள்,  வழிப்பறியில் ஈடுபடுபவர்கள் என முதல்வர் குமாரசாமி விமர்சித்துள்ளார்.  விவசாயிகளை விமர்சிக்கும் குமாரசாமிக்கு முதல்வராக பதவி வகிக்கத் தகுதியில்லை. 
38 சட்டப்பேரவை உறுப்பினர்களை வைத்துள்ள மஜத,  காங்கிரஸ் துணையுடன் ஆட்சியை நடத்தி வருகிறது.  பெரும்பான்மை இல்லாத கட்சியின் முதல்வராக உள்ள குமாரசாமி, அவை அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.  விவசாயிகளை அவமானப்படுத்தும்படி பேசும் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசை கண்டித்து மாநிலம் தழுவிய தொடர் போராட்டத்தில் பாஜக ஈடுபடும். 
கரும்புக்கு ஆதரவு விலையை நிர்ணயிக்காத அரசை கண்டித்து, வரும் டிச. 10-ஆம் தேதி முதல் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ள பெலகாவி சுவர்ணசெளதா முன் ஒரு லட்சம் விவசாயிகளைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.  ஆட்சிப் பொறுப்பேற்று 6 மாதங்களாகியும், விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யவில்லை. கரும்புக்கு ஆதரவு விலையை நிர்ணயிக்கவில்லை.
கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத்தொகை பிரச்னையை விதான செளதாவிலிருந்து ஆலோசனை மூலம் தீர்க்க முடியாது.  பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் சென்று ஆய்வு நடத்தி தீர்வு காண வேண்டும் என்றார்.
தர்னாவில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.அசோக்,  பாஜக பொதுச் செயலாளர் ரவிகுமார், சதாசிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT