பிஎச்.டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

பிஎச்.டி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிஎச்.டி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-19-ஆம் கல்வியாண்டில் பிஎச்.டி பட்டம் பயின்றுவரும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த 1, 2-ஏ, 3-ஏ, 3-பி, இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு மாத கல்வி உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டுவருகிறது. 
இந்தத் திட்டத்தில் பயன்பெறவிரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தத் துறையிடம் இருந்து ஏற்கெனவே ஆராய்ச்சிப் படிப்புக்காக கல்வி உதவித்தொகை பெற தகுதிப்படைத்த, நிகழ் கல்வியாண்டில் பிஎச்.டி பட்டப்படிப்பை தொடர தகுதி பெற்றுள்ள மாணவர்கள் 2018-19-ஆம் கல்வியாண்டில் பிஎச்.டி படிப்பில் சேர விண்ணப்பங்களை செலுத்தலாம். 
விண்ணப்பங்களை  w‌w‌w.​b​a​c‌k‌w​a‌r‌d​c‌l​a‌s‌s‌e‌s.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n  என்ற இணையதளத்தில் நவ.30-ஆம் தேதிக்குள் பதிவிடலாம். மேலும் விவரங்களுக்கு 8050770004 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com