18 நவம்பர் 2018

கர்நாடக இந்து நாடார் சங்க மாதாந்திரக் கூட்டம்

DIN | Published: 11th September 2018 09:41 AM

கர்நாடக இந்து நாடார் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெங்களூரில் திங்கள்கிழமை கர்நாடக இந்து நாடார் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் அதன் தலைவர் ஆர்.கே.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத் துணைத் தலைவர் பி.எஸ்.சுரேஷ்குமார், செயலர் குருசாமி, பொருளாளர் சித்தானந்தன், துணைச் செயலர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட ஏராளமான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சங்க உறுப்பினர்களை குடும்பத்தோடு அக். 20, 21 ஆகிய தேதிகளில் ஏலகிரி மலைக்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்ல கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சங்கத்தின் சார்பில் வீட்டுவசதி கூட்டுறவு சங்கத்தை தொடங்கி, உறுப்பினர்களுக்கு வீட்டுமனை ஏற்படுத்தி தரவும், மாதந்தோறும் 2-ஆவது ஞாயிற்றுக்கிழமை திருமண வரன் பதிவு செய்துகொள்ளவும் முடிவுசெய்யப்பட்டது. கூட்டத்தில் "படிக்காத காமராஜரிடம் படிக்க வேண்டிய பாடம்' என்ற நூல் வெளியிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டது. சித்தானந்தன் நன்றி கூறினார்.

More from the section

தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் வேளாண் திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பு: அமைச்சர் கிருஷ்ணபைரே கெளடா
விவசாயிகள் குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறார் முதல்வர் குமாரசாமி
முதல்வர் பதவி அளித்தால் சிறப்பாக செயல்படுவேன்
"4 ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்த மருத்துவர்களுக்கு பணி நிரந்தரம்'
கப்பன் பூங்காவில்  இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்