வியாழக்கிழமை 15 நவம்பர் 2018

லஞ்ச ஒழிப்புப் படை சார்பில் இன்று குறைதீர் முகாம்

DIN | Published: 11th September 2018 09:35 AM

பெங்களூரில் லஞ்ச ஒழிப்புப் படை சார்பில் செவ்வாய்க்கிழமை (செப். 11) குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் படையினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு மாநகர லஞ்ச ஒழிப்புப் படை சார்பில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பெங்களூரு மாநகராட்சி ஜெயநகர் துணை ஆணையர் (தெற்கு) அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்டு லஞ்சம், ஊழல் தொடர்பான தங்கள் பிரச்னைகள், குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இதுகுறித்து மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய செல்லிடப்பேசி எண்கள்- 9480806215, 9480806262.

More from the section

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு
"புயலைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை'
கஜா புயல் எச்சரிக்கை: மீனவ கிராமங்களில் எம்எல்ஏ ஆலோசனை
கஜா புயல் எச்சரிக்கை: நாகை மீனவ கிராம மக்களைச் சந்தித்தார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்
சாராயம் விற்ற பெண் கைது