வெள்ளிக்கிழமை 16 நவம்பர் 2018

வேளாண் அறிவியல் சேர்க்கை: விருப்பப் பாடங்கள், கல்லூரி பதிவு தொடக்கம்

DIN | Published: 11th September 2018 09:42 AM

வேளாண் அறிவியல் மாணவர் சேர்க்கைக்காக விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை பதிவுசெய்யும் நடைமுறை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2018-19-ஆம் ஆண்டில் வேளாண் கல்வி மாணவர் சேர்க்கை பெறுவதற்கு முன்பாக மாணவர்கள் தெரிவுசெய்ய விரும்பும் விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை இணையதளத்தில் பதிவு செய்வது அவசியமாகும். அதற்கான நடைமுறை
செவ்வாய்க்கிழமை (செப்.11) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
மாநிலத்தில் உள்ள வேளாண் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் சேர்க்கை இடங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன்படி, செப். 17-ஆம் தேதி நண்பகல் 1 மணி முதல் செப். 19-ஆம் தேதி காலை 11மணி வரை விருப்பப் பாடங்கள், விருப்பக்
கல்லூரிகளை பதிவுசெய்யலாம்.  இதனடிப்படையில், செப். 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு  w‌w‌w.‌k‌e​a.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் மாதிரி சேர்க்கை இடங்கள் ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில் கல்லூரி வாரியாக, பாடப் பிரிவு வாரியாக கட்-ஆஃப் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டதை மாணவர்கள் அறியலாம். இடங்கள் ஒதுக்கியதில் திருப்தி அடைந்த மாணவர்கள் செப். 20 முதல் 23-ஆம் தேதி வரை இணையதளத்தில் அதை உறுதி செய்யலாம். சேர்க்கை உறுதி சான்றிதழை இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொண்டு, செப். 24-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று சேர்க்கை பெறலாம்.
 

More from the section

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு
இஸ்ரேல் நாட்டு விவசாய முறையை பின்பற்ற வேண்டும்: ஆளுநர் வஜுபாய் வாலா


கோலார் தங்கவயலில் தொடர் மின்வெட்டு: மக்கள் அவதி

பெங்களூரு தமிழ்ச் சங்கத் தேர்தல்: கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
"கஜா' புயல்: அடுத்த 2 நாள்களுக்கு கர்நாடகத்தில் மழை