சனிக்கிழமை 17 நவம்பர் 2018

கிராமப்புற இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி

DIN | Published: 12th September 2018 08:23 AM

கிராமப்புற இளைஞர்கள் தொழில் தொடங்க முதல்வரின் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு நகர மாவட்ட தொழில் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தொழில் துறை சார்பில் 2018-19-ஆம் ஆண்டில் முதல்வரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கிராமப்புறத்தைச் சேர்ந்த இளைஞர், பெண்கள் குறுந்தொழிலகங்களை அமைக்க மானியத்துடன்கூடிய கடனுதவி அளிக்கப்படுகிறது. 
இந்தத் திட்டத்தில் 20 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட கிராமம் அல்லது பேரூராட்சியில் தொழிலகங்கள் தொடங்க வாய்ப்பு தரப்படும். மொத்த செலவில் பொதுப்பிரிவினருக்கு 25 சதவீதம், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். 
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்போர் கடனுதவி பெற அனைத்து தேசிய வங்கிகள், பிராந்திய, வணிக வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் புகைப்படம், வரைவு செயல்திட்டம், வயது உறுதி சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, இருப்பிடச்சான்றிதழ், தொழில்பயிற்சி சான்றிதழ் ஆகியவற்றுடன் வரும் 15-ஆம் தேதிக்குள் இணை இயக்குநர், பெங்களூரு நகர மாவட்ட தொழில்மையம், ராஜாஜிநகர் தொழில்பேட்டை, ராஜாஜிநகர், பெங்களூரு-10 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 080-23501478 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

More from the section

"குழந்தைகளின் செவித் திறனை சோதிப்பது அவசியம்'
வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார்
வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி
அசையா சொத்துப் பதிவுக்கு இணையதள சேவை: முதல்வர் தொடக்கிவைப்பு
பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் பெங்களூரு தமிழ்ச் சங்கம்!