திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

குழந்தைகளுக்கு செவித்திறன் சோதனை அவசியம்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட்லீ

DIN | Published: 12th September 2018 08:26 AM

குழந்தைகளுக்கு செவித் திறன் பரிசோதனை நடத்துவதை இந்திய அரசு கட்டாயமாக்க வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட்லீ கேட்டுக் கொண்டார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
இந்தியாவில் காது கேளாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். பிறக்கும் போதே குழந்தைகளின் காது கேளாமை குறித்த சோதனையை கட்டாயமாக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காது கேளாமை பிரச்னையை தொடக்கத்திலே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க முடியும். 
உலக சுகாதார மையத்தின் கணக்கெடுப்பில் 34 மில்லியன் குழந்தைகளுக்கு காது கேளாமை பிரச்னை உள்ளது. இது 2050 ஆண்டுக்குள் 900 மில்லியனை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து இந்தியாவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றார்.
 

More from the section

சித்தராமையாவுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு
ஜனநாயகம் காணாமல் போய்விட்டது
மண்டல வாரியான வேளாண் கொள்கை விரைவில் அமல்
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பா.ஜ.க.வுக்கு செல்லமாட்டார்கள்: தினேஷ் குண்டுராவ்
குடகில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் நிதியுதவி: அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே