செவ்வாய்க்கிழமை 20 நவம்பர் 2018

பயிர்க் கடன் தள்ளுபடியால் நிதிப் பற்றாக்குறை?

DIN | Published: 12th September 2018 08:24 AM

பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்துக்கே அதிக நிதி ஒதுக்கப்படுவதாகக் கூறுவதில் உண்மையில்லை; வளர்ச்சித் திட்டத்துக்கும் நிதி சமமாக பகிர்ந்தளிக்கப்படுவதாக முதல்வர் குமாரசாமி விளக்கமளித்தார்.
இதுகுறித்து மைசூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
வளர்ச்சிப் பணிகளுக்கு நிதியை ஒதுக்காமல், அனைத்து நிதியையும் பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்துக்கு  ஒதுக்கிவிட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காகவே ரூ.2.18 லட்சம் கோடியை பல்வேறு துறைகளுக்கு பட்ஜெட் மூலம் ஒதுக்கியுள்ளேன். எனவே, வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்துக்கு மாற்றப்படுவதாகக் கூறுவதில் உண்மையில்லை.
தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் தொகை ரூ.30 ஆயிரம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடியை நான்கு தவணைகளில் அடைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான திட்டத்தை நவம்பரில் அறிவிப்பேன். எனது கருத்தை வங்கிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. நிதி வீணாவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

More from the section

பெங்களூரில்  நவம்பர் 23 முதல் 25 வரை அறிவியல் கண்காட்சி
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
விவசாயிகளின் போராட்டத்துக்கான காரணம் புரியவில்லை: முதல்வர்
கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி விதானசெளதாவை முற்றுகையிட விவசாயிகள் முயற்சி
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கல்வி மையங்களைத் தொடங்க விண்ணப்பிக்க அழைப்பு