சம்ஸ்கிருதத்தை பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா

வேறு மொழிகளின் ஆக்கிரமிப்பிலிருந்து சம்ஸ்கிருதத்தை பாதுகாக்க வேண்டும் என கர்நாடக உயர் கல்வித் துறை அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா கேட்டுக் கொண்டார்.

வேறு மொழிகளின் ஆக்கிரமிப்பிலிருந்து சம்ஸ்கிருதத்தை பாதுகாக்க வேண்டும் என கர்நாடக உயர் கல்வித் துறை அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா கேட்டுக் கொண்டார்.
பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் கர்நாடக சம்ஸ்கிருத பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியது: 
பழைமையிலும், கலாசாரத்திலும் சிறந்து விளங்கும் மொழியாக சம்ஸ்கிருதம் விளங்குகிறது. அண்மைக்காலமாக அந்த மொழியில் ஆங்கிலம், ஜெர்மனி உள்ளிட்ட மொழிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. சம்ஸ்கிருதத்தை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும். 
பழைமையான மொழியை அழியவிடக் கூடாது. அந்த மொழியை தொடர்ந்து பேச்சு, எழுத்து வழக்கில் பயன்படுத்த வேண்டும். சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தின் கீழ் 31 கல்லூரிகள், 556 மடங்களில் உள்ள பாடசாலைகள், 19 வேதப்பாடச் சாலைகள் உள்ளன. சம்ஸ்கிருதப் பல்கலைக்கழக வளாகத்தில் மொழி வளர்ச்சி மையம் அமைப்பதற்கு 10 ஏக்கர் நிலம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
நிகழ்ச்சியில் உடுப்பி விஷ்வதீர்த்த சுவாமிகள், ஆதிசுன்சுனகிரி மடாதிபதி நிர்மலானந்தா சுவாமிகள், சம்ஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் பத்மசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com