ஹோமியோபதி மருத்துவத்தை ஊக்குவிக்க நடவடிக்கை: அமைச்சர் சிவானந்த பாட்டீல்

ஹோமியோபதி மருத்துவத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் தெரிவித்தார்.

ஹோமியோபதி மருத்துவத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரு மாகடிசாலை கே.எச்.பி.காலனியில் புதன்கிழமை ஹோமியோபதி மாளிகை திறப்பு விழாவில் அவர் பேசியது: சர்வதேச அளவில் அலோபதி சிகிச்சை முறைக்கு இணையாக ஹோமியோபதி, ஆயுர்வேத சிகிச்சைகள் பிரபலமாகி வருகின்றன. பக்கவிளைவுகள் இல்லாத ஹோமியோபதி, ஆயுர்வேத சிகிச்சையை மக்கள் பின்பற்றினால், ஆலோபதி சிகிச்சை முறைக்கு போட்டியை ஏற்படுத்த முடியும். 
சீனா போன்ற நாடுகள் தங்கள் உள்ளூர் சிகிச்சைக்கு முறைகளை அதிக அளவில் பின்பற்றுகின்றன. இந்தியாவிலும் உள்நாட்டு வைத்தியத்தை பின்பற்ற வேண்டும். உடனடி நிவாரணம் அலோபதி அளித்தாலும், அதனால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், பக்கவிளைவுகள் இல்லாத வைத்திய முறை ஹோமியோபதியில் உள்ளது. இந்த சிகிச்சை முறையில் நிரந்தரத் தீர்வும் கிடைக்கும். 
மாநிலத்தில் ஹோமியோபதி மருத்துவத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வட்டந்தோறும் ஹோமியோபதி சுகாதார மையங்கள் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. எந்த ஒரு திட்டமும் வெற்றி பெறுவதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை என்றார். நிகழ்ச்சியில் ஹோமியோபதி வாரியத்தின் தலைவர் பி.டி.ருத்ரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com