"மனித இயல்புகளை வளர்த்தெடுப்பதில் பள்ளிகளுக்கு முக்கியப் பங்கு'

மனித இயல்புகளை வளர்த்தெடுப்பதில் பள்ளிகளுக்கு முக்கியப்பங்கு உள்ளதாக தென்மேற்கு ரயில்வே மகளிர் நலச் சங்கத் தலைவர் தீபாலிகுப்தா தெரிவித்தார்.

மனித இயல்புகளை வளர்த்தெடுப்பதில் பள்ளிகளுக்கு முக்கியப்பங்கு உள்ளதாக தென்மேற்கு ரயில்வே மகளிர் நலச் சங்கத் தலைவர் தீபாலிகுப்தா தெரிவித்தார்.
ஹுப்பள்ளியில் புதன்கிழமை தென்மேற்கு ரயில்வே மகளிர் நலச் சங்கத்தின் ஆங்கிலவழி உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவை தென்மேற்கு ரயில்வே பொதுமேலாளர் ஏ.கே.குப்தா குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்தார்.2016-17, 2017-18-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் சிறப்பிடம் மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சுழல்கோப்பையை வழங்கி கெளரவித்தார். 
அடுத்தடுத்த ஆண்டுகளில் பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் சிறப்பிடம் பிடிக்க இந்நிகழ்ச்சி ஊக்கம் அளிக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்று ஏ.கே.குப்தா தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக பங்கேற்ற தென்மேற்கு ரயில்வே மகளிர் நலச் சங்கத்தலைவர் தீபாலிகுப்தா, பேசியது: 
எந்தவொரு மனிதனின் வாழ்க்கையிலும் பள்ளிக்கல்வி மிகவும் முக்கியமாகும். ஒரு மாணவர், தனது மனித இயல்புகளை வளர்த்தெடுத்துக் கொள்வதில் பள்ளிகளுக்கு முக்கியப்பங்கு உள்ளது. 
முதியவர்களுக்கு மரியாதை அளிப்பது, நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்பது, ஒழுக்கம், நேரம் தவறாமை மற்றும் மிகவும் முக்கியமாக மனித மாண்புகளைக் கற்றுக்கொடுப்பது பள்ளிகள் தான். 
கல்வி கற்பது, மிகவும் மதிப்பு வாய்ந்த மற்றும் மனதை விரிவுபடுத்தும் அனுபவமாகும். மாணவர்களின் குண இயல்புகளை வடித்தெடுப்பதில் ஆசிரியர்கள் மிகுந்த அக்கறையோடு செயல்பட வேண்டியுள்ளது. நமதுநாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொறுப்புகளை தாங்கி நிற்கும் இளம் தலைமுறையை நல்வழிப்படுத்தும் மகத்தானப் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளன.
நாட்டையும் சமுதாயத்தை நல்வழிப்படுத்தும்பணி ஆசிரியர்களுடையதாகும். ஆசிரியர்கள், சமூகச் சீர்த்திருத்தவாதிகளைப் போன்றவர்கள். கல்வி நிறுவனங்கள் வலிமையானதாகவும், தரமானதாகவும் அமைய ஆசிரியர்களே காரணமாகும். நூற்றுக்கணக்கான விளக்குகளை ஏற்றி வைக்கும் விளக்காக ஆசிரியர்கள்விளங்குகிறார்கள். 
எனவே, ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையை வழங்குவது சமூகத்தின் கடமையாகும் என்றார்.
விழாவில் சங்கத்தின் துணைத் தலைவர் சிந்துஜாசிங், இணைச்செயலாளர் ராதாயாதவ், பொருளாளர் சுனிதாகுப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com