குடகில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் நிதியுதவி: அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே

குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழம

குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
குடகு மாவட்டத்தில் அண்மையில் பெய்த பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆடைகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்கிக்கொள்வதற்காக முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரம் கூடுதல் நிவாரண நிதி அளிக்கப்படும். இயற்கை பேரிடரில் பாழாகியுள்ள வீடுகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,800, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 ஆயிரம் ஆகமொத்தம் ரூ.3,800 கொடுக்க வாய்ப்புள்ளது. ஆனால், இது நடைமுறை சாத்தியமில்லை என்பதால் முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் கூடுதலாக வழங்க தீர்மானிக்கப்பட்டது.
நான், முதல்வர், துணை முதல்வர், மாவட்ட அமைச்சர், பிற அமைச்சர்கள் அண்மையில் குடகு மாவட்டத்துக்கு சென்றிருந்த போது, நிவாரண நிதியுதவியை உயர்த்துமாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் கேட்டுக்கொண்டிருந்தனர். அதற்கிணங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையின் ஒப்புதலும் கிடைத்துள்ளது.
குடகு மாவட்டத்தில் வெள்ளத்தில் 1,156 வீடுகள் மிகவும் மோசமாக பாழாகியுள்ளன. இந்த குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இதற்காக ரூ.5.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com