சித்தராமையாவுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு

கர்நாடக அரசியலில் நெருக்கடியான சூழல் நிலவும் நிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையாவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்பலர் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

கர்நாடக அரசியலில் நெருக்கடியான சூழல் நிலவும் நிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையாவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்பலர் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
மஜத-காங்கிரஸ் கூட்டணியை உடைக்க பாஜக தொடர்முயற்சியில் ஈடுபட்டு வருவதாக இரு கூட்டணி கட்சிகளும் குற்றம்சாட்டி வரும் நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பை,

சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக சனிக்கிழமை காலை முதல் மாலை வரை தகவல் வந்தவண்ணம் இருந்தது.
இதனிடையே, கோலார் மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா, செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் எனது பங்கு எதுவுமில்லை.

ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற பகல்கனவில் பாஜக மிதந்து வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். கட்சிக்குள் உள்கட்சி பூசல் எதுவுமில்லை. கூட்டணி

ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பாஜக கூறிவருவது ஒருபோதும் நடக்காது. கூட்டணி அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
இதனிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் மும்பை, சென்னைக்கு புறப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அவசர அவசரமாக பெங்களூருக்கு திரும்பிய சித்தராமையா, காங்கிரஸ்

எம்.எல்.ஏ.க்களை தொடர்புகொண்டு பேசினார். பெங்களூரில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் தன்னை சந்திக்கும்படி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழுத் தலைவரான

சித்தராமையாவை காண அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ், அமைச்சர்கள் கிருஷ்ணபைரே கெளடா, ஜமீர் அகமது,

எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், பிரசாத் அப்பய்யா, கணேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் சித்தராமையாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதில், கர்நாடகத்தில் எழுந்துள்ள நெருக்கடியான அரசியல் சூழல் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
கூட்டணி அரசை காப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் சித்தராமையா ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தன்னை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பேசிய சித்தராமையா,

பாஜகவிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டும் கட்சியை விட்டு செல்லக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com