மண்டல வாரியான வேளாண் கொள்கை விரைவில் அமல்

மண்டல வாரியான வேளாண் கொள்கை வெகுவிரைவில் அமல்படுத்தப்படும் என வேளாண் துறை அமைச்சர் சிவசங்கர் ரெட்டி தெரிவித்தார்.


மண்டல வாரியான வேளாண் கொள்கை வெகுவிரைவில் அமல்படுத்தப்படும் என வேளாண் துறை அமைச்சர் சிவசங்கர் ரெட்டி தெரிவித்தார்.
பெங்களூரில் சனிக்கிழமை நிலவள தகவல் பங்காளர்களின் மாநில பயிலரங்கை தொடக்கிவைத்து அவர் பேசியது: கர்நாடகத்தில் 4 வருவாய் மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களின் தட்பவெப்பம் வேறுபடுகிறது. இதற்கு தகுந்தவாறு மண்டல வாரியாக வேளாண் கொள்கைகளை வகுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கொள்கையை வெகுவிரைவில் அமல்படுத்தவும் அரசு முடிவுசெய்துள்ளது. தட்பவெப்பத்துக்கு தகுந்தவாறு எந்த பயிர்களை நடலாம், நீரை சிக்கனமாக எப்படி பயன்படுத்தலாம் போன்றவை இந்த கொள்கையில் இடம்பெற்றிருக்கும். மேலும் இது தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயமும் நமக்குள்ளது.
வேளாண்மைக்காக உழைத்து வருவோர், மாநிலத்தில் இருக்கும் வேளாண் நிறுவனங்கள் நடத்தும் ஆய்வுகளை அரசு மட்டத்தில் ஆய்ந்து, அந்த நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி மாநிலத்தின் வேளாண் வளர்ச்சிக்கு தேவையான மிகச்சிறந்த திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
நீர் ஆதார மேம்பாட்டுத் துறை, உலக வங்கியின் கடனுதவியுடன் செயல்படுத்த இருக்கும் கர்நாடக நீர் ஆதார மேம்பாட்டு திட்டம்-2 (3-ஆம் நிலை) 2013-14-ஆம் ஆண்டு முதல் ரூ.527.70கோடியில் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தின்கீழ் மாநிலத்தின் 11 மாவட்டங்களான சாமராஜ்நகர், தாவணகெரே, தும்கூரு, சிக்கமகளூரு, ராய்ச்சூரு, கொப்பள், கலபுர்கி, யாதகிரி, கதக், பீதர், விஜயபுராவில் 2,531 சிறு நீர் ஆதாரங்களை உருவாக்கியிருக்கிறோம். இந்ததிட்டம் வெற்றிபெற்றால், எதிர்காலத்தில் உலக வங்கியின் கடனுதவி கிடைக்கும். அப்போது, பிற மாவட்டங்களில் இந்த திட்டம் விரிவாக்கப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் வேளாண் துறை செயலர் எம்.மகேஷ்வர், இயக்குநர் சீனிவாஸ், திட்ட இயக்குநர் பிரபாஸ்சந்திரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com